Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka
Ministry of Finance, Law and Order, Education, Local Government, Cultural Affairs, Transport, Land Irrigation Economic Promotion and Rural Development and Constructions
Home About Us Introduction

Introduction

There are many legends which illustrate the glory of Uva which dates back to the pre historic  dominion of king Ravana in Sri Lankan history. War between  Rama and Ravana, the natural beauty  of Uva, Dandumonara, the first visit of Lord Buddha to Sri Lanka predominate among them. It is Indicted in the history that Uva has been a protected area from the times of Anuradhapura and Polonnaruwa.

Lower Uva region which is abundant in very fertile paddy fields was then known as Wellassa. However during the western rule Uva province was subjected to a very suppressive state. The birth place of heroic Kappetipola became a  lonely Palugama. Fertile paddy fields were destroyed. Tanks and anicuts were destroyed. Uva which was supposed to be the  backbone of Sri Lanka turned very helpless . The valuable forests of Ihala Uva area were cleared and the lands were brought under the coffee cultivation and tea cultivations. Tamils which has an Indian origin were engaged to work in those estates. Under these circumstances in Uva area at present in addition to ancestral Sinhalese people, there live estate tamils; Muslims arrived for business purposes and (Adi vasis) the primitives.

At the time of Sinhala dominion Uva Disawa has been recognized as  an administrative unit. Uva which  was known as District of Badulla was divided into two districts called Badulla and Monaragala in 1958. Under the 13th amendment  of the constitution of 1978 Uva received the opportunity to be decentralized as a separate provincial administrative unit.

There are many facts which reveal that Uva remains in a low level of development amidst provincial development challenges when compared with the some provinces of Sri Lanka. Economic level of the people dissemination of resources, poverty, infrastructure facilities  level of education can be pointed out as indicators. Amidst the  modern information communication technology and globalization background Uva province remains in a backward position. As an attempt cope up with these challenges Uva Provincial Council has realized the path to economic, social, cultural and spiritual development of the province runs through modern information communication technology and globalization. In this environment Uva Province has determined to go ahead towards development realizing modern information communication technology as a strategy of development by co-ordinating  public library services which are conducted by local authorities under the theme of welfare and school libraries which attempt to get a clear path as educational libraries.

It is expected to apply libraries and information communication technology as developmental strategies for capital development, productivity development and resource utility for people of Uva. In order to make these activities successful, Uva Provincial Council expects, the Library Services Board of the Uva Province to provide development opportunities by coordinating the library of Uva province with the central library of Badulla and Moneragala districts, public and school libraries and to provide immense yields of information communication technology for people of Uva and provide opportunity for people of Uva to rise themselves again as a proud nation.

 

 

அறிமுகம்

இலங்கை வரலாற்றில் வரலாற்றுக்கு முற்பட்ட இராவண மன்னின் காலம் வரையான நீண்ட வரலாற்றுக்கு உரிமைப் பாராட்டுகின்ற ஊவாவின் மகிமைத் தொடர்பில் பல்வேறு கதைகள் விளங்குகின்றன. இராம இராவண யுத்தம் ஊவாவின் இயற்கை வனப்பு, புற்பக விமானம், புத்த பகவானின் முதலாவது இலங்கை விஜயம் போன்றவை அவற்றுள் முக்கியத்துவம் வகிக்கின்றன. அனுராதபுரம், பொலன்னறவை யுகங்களிலிருந்தே பாதுகாப்புப் பிரதேசம் ஒன்றாக ஊவா பிரதேசம் பற்றி வரலாற்று ஏடுகளில் குறிக்கப்பட்டுள்ளது

செழிப்பு மிக்க பயிர்ச்செய்கைக் காணிகள் நிறைந்த மேல் ஊவா பிரதேசம் அன்று வெல்லஸ்ஸ எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. எனினும் மேற்குலக ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்களால் ஊவா மாகாணம் தீவிர அடக்கு முறைகளுக்கு இலக்காகியது. செழிப்பான பயிர்ச்செய்கை நிலங்கள் அழிக்கப்பட்டன. இலங்கையின் முதுகெலும்பாக விளங்கிய ஊவா நிர்க்கதி நிலையுற்றது. மேல் ஊவா பிரதேசத்தின் பெருமதி மிக்க காடுகள் அழிக்கப்பட்டு கோப்பி மற்றும் தேயிலைச் செய்கைக்காக பயன்படுத்தப்பட்டன. இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் அப்பெருந்தோட்டங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். இத்தகைய நிலைமையின் கீழ் ஊவா மாகாணத்தின் மரபுவழிச் சிங்கள மக்களுக்கு மேலதிகமாக பெருந்தோட்டத் தமிழ் மக்களுக்கும், வர்த்தக நடவடிக்கைகளுக்காக வந்த முஸ்லிம் மக்களும், பர்வீகக் குடிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வேடர்களும் தற்போது ஊவாவில் வசிக்கின்றனர்.

சிங்கள மன்னர் காலத்தில் ஊவா பிரதேசம் ஒரு நிருவாக அலகாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. 1958 இல் பதுளை மாவட்டமாக அழைக்கப்பட்ட ஊவா பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பின் 13 வது திருத்தத்தின் கீழ் ஊவா தனிவேறான மாகாண நிர்வாக அலகெனும் வகையில் பன்முகப்படுத்த வாய்ப்பு கிடைத்தது.

இலங்கையின் ஒரு சில மாகாணங்களுடன் ஒப்பிடும் போது ஊவா மாகாணம் அபிவிருத்திச் சவால்களின் மத்தியில் இன்னமும் தாழ்ந்த மட்டத்திலேயே  நிலவுகின்றமைக்கான பல சான்றுகள் உள்ளன. மக்களின் பொருளாதார நிலை, வளங்கள் பகிர்ந்து செல்லல், வறுமை, உடகட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விநிலை என்றவகையில் அவைகளை எடுத்துக்காட்டலாம். நவீன தகவல் தொழில்நுட்ப முறையிலும் உலகமயமாக்கள் பின்ன்ணியன் கீழும் ஊவா மாகாணம் பின்னடைவு நிலையை அடைந்துள்ளது. அந்த சவாலை வெற்றி கொள்வதற்காக ஊவா மாகாண சபை  மேற்கொள்ளும் முயற்சியின் பெறுபேறாக கலாசாரம் மற்றும் ஆன்மீக அபிவிருத்திக்கான பயணப் பாதை நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் உலகமயமாக்கலின்  ஊடாகவே காணப்படுகின்றதென்பதை ஊவா மாகாண சபை கருத்தில் கொண்டுள்ளது. அத்தகைய சுற்றுச் சூழலின் கீழ் தற்போது உள்ளூராட்சி நிறுவனங்களின் மூலமாக நலனோம்பல் தொனிப்பொருளின் கீழ் பேணி வருகின்ற பொது நூலக சேவையையும், கல்வி நூலகம் என தெளிவான வழியைக் கண்டுப்பிடிக்க முயற்சி செய்கின்ற பாடசாலை நூலகங்களையும் இணைப்பக்கம் செய்து நவீன அபிவிருத்தி உபாயமார்க்கமென இனங்கண்டு அபிவிருத்தியை  நோக்கி முன்னேறிச் செல்ல ஊவா மாகாண சபை திடசங்கற்பம் பூண்டுள்ளது. நூலக மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஊவா மக்களின் மூலதன அபிவிருத்தி, உற்பத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் வளங்களின் பயன்பாட்டு அபிவிருத்திக்கான உபாயமார்க்கமாக பிரயோகிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பணிகளை வெற்றியீட்டச் செய்யும் பொருட்டு ஊவா மாகாண நூலகம் பதுனள  மற்றும் மொனரானலை மாவட்ட மத்திய நூலகங்களுக்கும் பொது மற்றும் பாடசாலை நூலகங்களுக்குமிடையில்இணைப்பக்கத்தைப் பேணி அபிவிருத்திக்கான வாய்ப்புகளை வழங்கவும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் நற்பயன்களை ஊவா மாகாண மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவும், தகவல் துறை, எழுத்தறிவுத் திறனைக் கொண்டப் பெருமை மிக்க மக்களாக மீண்டும் நிமிர்ந்து நிற்க ஊவா மக்களுக்கு வாய்பினை ஏற்படுத்திக்கொடுக்கவும் ஊவா மாகாண சபையின்  ஊவா மாகாண நூலக சேவைகள் சபை எதிர்பார்கின்றது.

 

 
April 2024
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4