Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் போக்குவரத்து, காணி, நீர் பாசனம், பொருளாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு

அறிமுகம்

இலங்கை வரலாற்றில் வரலாற்றுக்கு முற்பட்ட இராவண மன்னனின் காலம் வரையான நீண்ட வரலாற்றுக்கு உரிமையைப் பாராட்டுகின்ற ஊவாவின் மகிமை தொடர்பில் பல்வேறு கதைகள் விளங்குகின்றன. இராம இராவண யுத்தம், ஊவாவின் இயற்கை வனப்பு, புற்பக விமானம் புத்த பகவானின் முதலாவது இலங்கை விஜயம் போன்றவை அவற்றுள் முக்கியத்துவம் வகிக்கின்றன. அனுராதபுரம், பொலன்னறுவை யுகங்களிலிருந்தே பாதுகாப்புப் பிரதேசம் ஒன்றாக ஊவா பிரதேசம் பற்றி வரலாற்று ஏடுகளில் குறிக்கப்பட்டுள்ளது.

செழிப்பு மிக்க பயிர்ச்செய்கைக் காணிகள் நிறைந்த இஹல ஊவா பிரதேசம் அன்று வெல்லஸ்ஸ எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. எனினும் மேற்குலக ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்களால் ஊவா மாகாணம் தீவிர அடக்கு முறைகளுக்கு இலக்காகியது. செழிப்பான பயிர்ச்செய்கை நிலங்கள அழிக்கப்பட்டன. இலங்கையின் முதுகெலும்பாக விளங்கிய ஊவா நிர்க்கதி நிலையுற்றது. இஹல ஊவா பிரதேசத்தின் பெறுமதிமிக்க காடுகள் அழிக்கப்பட்டு கோப்பி மற்றும் தேயிலைச் செய்கைக்காக பயன்படுத்தப்பட்டன. இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் அப்பெருந்தோட்டங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். இத்தகைய நிலைமையின் கீழ் ஊவா மாகாணத்தின் மரபுவழிச் சிங்கள மக்களுக்கு மேலதிகமாக பெருந்தோட்டத் தமிழ் மக்களும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வந்த முஸ்லிம் மக்களும் பூர்வீகக் குடிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வேடர்களும் தற்போது ஊவாவில் வசிக்கின்றனர்.

சிங்கள மன்னர் காலத்தில் ஊவா பிரதேசம் ஒரு நிருவாக அலகாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. 1958 இல் பதுளை மாவட்டமாக அழைக்கப்பட்ட ஊவா பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் கீழ் ஊவா தனிவேறான மாகாண நிர்வாக அலகெனும் வகையில் பன்முகப்படுத்த வாய்ப்பு கிடைத்தது.

இலங்கையின் ஒரு சில மாகாணங்களுடன் ஒப்பிடும் போது ஊவா மாகாணம் அபிவிருத்திச் சவால்களின் மத்தியில் இன்னமும் தாழ்ந்த மட்டத்திலேயே நிலவுகின்றமைக்கான பல சான்றுகள் உள்ளன.  மக்களின் பொருளாதார நிலை, வளங்கள் பகிர்ந்து செல்லல், வறுமை, உட்கட்டமைப்பு வசதிகள், கல்விநிலைக் குறிகாட்டி என்றவகையில்  அவைகளை எடுத்துக்காட்டலாம். நவீன தகவல் தொல்நுட்ப முறையிலும் உலகமயமாக்கல் பின்னணியின் கீழும் ஊவா மாகாகணம் பின்னடைவு நிலையை அடைந்துள்ளது. அந்த சவாலை வெற்றி கொள்வதற்காக ஊவா மாகாண சபை மேற்கொள்ளும் முயற்சியின் பெறுபேறாக மாகாண நூலக சேவைகள் சபை 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மாகாணத்தின் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் ஆன்மீக அபிவிருத்திக்கான பயணப் பாதை நவீன தகவல் தொடர்பாhடல் தொழில்நுட்பம் மற்றும் உலகமயமாக்கலின் ஊடாகவே காண்படுகின்றதென்டபதை ஊவா மாகாண சபை கருத்திற் கொண்டுள்ளது. அத்தகைய சுற்றுச் சூழலின் கீழ் தற்போது உள்ளூராட்சி நிறுவனங்களின் மூலமாக  நலனோம்பல் தொனிப்பொருளின் கீழ் பேணி வருகின்ற பொது நூலக சேவையையும் கல்வி நூலகம் என தெளிவான வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்ற பாடசாலை நூலகங்களையும் இணைப்பாக்கம் செய்து நவீன அபிவிருத்தி உபாயமார்க்கமென இனங்கண்டு அபிவிருத்தியை நோக்கி முன்னேறிச் செல்ல ஊவா மாகாண சபை திடசங்கற்பம் பூண்டுள்ளது.

நூலக மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஊவா மக்களின் மூலதன அபிவிருத்தி, உற்பத்திச் திறன் அபிவிருத்தி மற்றும் வளங்களின் பயன்பாட்டு அபிவிருத்திக்கான உபாய மார்க்கமாக  பிரயோகிக்க எதிர்பார்க்கப்படுகின்றது இந்த பணிகளை வெற்றியீட்டச் செய்யும் பொருட்டு ஊவா மாகாண நூலகம் பதுளை பற்றும் மொனராகலை மாவட்ட மத்திய நுலகங்களுக்கும் பொது மற்றும் பாடசாலை நூலகங்களுக்குமிடையில் இணைப்பாக்கத்ததை பேணி அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை வழங்கவும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் நற்பயன்களை ஊவா மாகாண மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் தகவல் துறை எழுத்தறிவுத் திறனைக் கொண்ட பெருமை மிக்க மக்களாக மீண்டும் நிமிர்ந்து நிற்க ஊவா மக்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கவும் ஊவா மாகாண சபையின் ஊவா மாகாண நூலக சேவைகள் சபை எதிர்பார்க்கின்றது.

 
மே 2024
S M T W T F S
28 29 30 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1