Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் போக்குவரத்து, காணி, நீர் பாசனம், பொருளாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு
முகப்பு 2010 வேலைத் திட்டங்கள்
Weblinks

2010 வேலைத் திட்டங்கள்

ஊவா மாகாண நூலக சேவைகள் சபை 2010 ஆம் ஆண்டுக்காக அமுலாக்கவுள்ள உத்தேச நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றிய அறிக்கை

1. வாசகர்களுக்கான வழிகாட்டல் பணிகளை முன்னேற்றுதல்.
2. உசாத்துணை நூலக வசதிகளை விருத்தி செய்தல்.
3. நூலக இரவல் வழங்கல் வசதிகளை விருத்தி செய்தல்.
4. நடமாடும் நூலக வசதிகளை விருத்தி செய்தல்.
5. கணினி நூலக வசதிகளை விருத்தி செய்தல்.
6. செய்தித்தாள் பிரிவின் வசதிகளை விருத்தி செய்தல்.

1. நூலக கடன் சேவைகளை நடைமுறைப்படுத்துதல்.
2. நூலக தகவல் தபாலை நடைமுறைப்படுத்துதல்.
3. சனசமூக நூலக சேவைகளை  நடைமுறைப்படுத்துதல்.
4. பிரதேச நூலக உபகுழுக்ககளைத் தாபித்தலும் அமுலாக்குதலும்.
5. நூலக தகவல் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
6. நூலக ஆவணப்படுத்தல் சேவைகளை அமுலாக்கல்.
7. நூலக SDI சேவைகளை அமுலாக்கல்.
8. நூலக தொனிப்பொருள் தின, வார, மாத நிகழ்ச்சிகளை அமுலாக்கல்.
9. வாசகர் கல்வி நிகழ்ச்சிகளை அமுலாக்கல்.
10. வெப் தளத்தை அமுலாக்குவதற்கான வசதிகளைப் பெற்றுக்கொள்ளுதல்.
11. நூலக கணனித் தரவுக் களஞ்சியத்தைத் தயாரித்தல்.
12. நூலகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை அமுலாக்குதல்.

1. கேட்போர்கூட மற்றும் விரிவுரை மண்டப வசதிகளை விருத்தி செய்தல்.
2. கேட்போர்கூட மற்றும் விரிவுரை மண்டப வசதிகள் பற்றிய சந்தைப்படுத்தல் மேம்பாட்டுப் பணிகள்.
3. கேட்போர்கூட மற்றும் விரிவுரை மண்டப வசதிகளின் ஆக்கத்திறனை விருத்தி செய்தல்.
4. கேட்போர்கூட மற்றும் விரிவுரை மண்டப வசதிகளின் உள்ளக மற்றும் வெளிச் சுற்றுச்சூழல் அபிவிருத்தியை  விருத்தி செய்தல்.
5. மாகாகண நூலக கலையரங்கத்தை மறுசீரமைத்தல்.

1. கட்டிடத் தொகுதியின் பராமரிப்பு வேலைகளைச் செய்தல்.
2. கட்டிடத் தொகுதியின் திருத்த வேலைகளைச் செய்தல்.
3. தளபாடங்களையும் ஏனைய உபகரணங்களையும் பழுதுபார்த்தல்.
4. இலத்திரனியல் தொழில்நுட்ப சாதனங்களைப் பராமரித்தல்
5. வாகனங்களின் திருத்த வேலைகளைச் செய்தல்
6. வாகனங்களின் பராமரிப்பு வேலைகளைச் செய்தல்
7. வாகனங்களுக்கான கொட்டகையை நிர்மாணித்தல்    
8. கணனி நூலகத்தின் திருத்த வேலைகளைச் செய்தல்.
9. கணனிப் பராமரிப்புப் பணிகளைப் புரிதல்.
10. தாபனப் பிரிவின் பிரிகையிடல் பணிகளை ஈடேற்றுதல்.
11. திறந்த வெளி வாசிகசாலைக்கான கூரையை அமைத்தல்.
12. கட்டிட வளவின் சுற்றுப்புற பூங்கா அலங்கரிப்பு.
13. கட்டிட வளவுக்குள்ளே அலங்கரிப்பு
14. கட்டித் தொகுதிக்கு வர்ணப்பூச்சு பூசுதல்
15. பாதுகாப்பு வேலியின் திருத்த வேலைகள்.
16. காகிதாதிகளையும் அலுவலக சாதனங்களையும் கொள்வனவு செய்தல்.
17. நூலகத்தின் ஆய்வுப் பகுதிக்கு கூரையமைத்தல்.
18. நூலகத்திற்கான தளபாடங்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்தல்.
19. துப்பரவேற்பாட்டு வசதிகளை பழுதுபார்த்தல்.             
20. சிற்றுண்டிச் சாலையின் பொது வசதிகளுக்கான பகுதியை  பிரிகையிடல்.
21. ஆவனங்களின் பேணல், அகற்றுதல் மற்றும் மீள்நிறுவுதல் பணிகள்.

1. நூலகத்திற்கான நூல்களைக் கொள்வனவு செய்தல்.
2. தமிழ் மொழி மூலத் தொகுப்பபுக்கான தமிழ் நூல்களைக் கொள்வனவு செய்தல்.
3. இலத்திரனியல் வெளியீடுகளைக் கொள்வனவு செய்தல்.
4. சஞ்சிகைகளைச் கொள்வனவு செய்தல்.
5. அரச பிரசுரங்களைக் கொள்வனவு செய்தல்.
6. செய்தித்தாள்களைக் கொள்வனவு செய்தல்.

1. பணியாளர்களின் ஆட்சேர்ப்பு
2. பணியாளர்களின் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்
3. மாகாண நூலகங்களின் நூலகப் பொறுப்பதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள்.
4. வாசகர் கழக செயற்பாட்டாளர்களைப் பயிற்றுவித்தல்.
5. ஆலோசனைக் குழு செயற்பாட்டாளர்களுக்கு விழிப்பூட்டுதல்.

1. ஊவா மாகாண நூலக சேவைகள் சபையின் வருமானத்தை உச்ச அளவிற்குக் கொண்டுவருதல்.
2. ஊவா மாகாண நூலக சேவைகள் சபையின் செலவினைக் குறைத்துக்கொள்ளல்.
3. நிதி முகாமைத்துவத்தை மேலும் ஒழுங்குமுறைப்படுத்துதல்.
4. கணக்கீட்டுச் செயற்பாட்டினை மேலும் ஒழுங்குமுறைப்படுத்துதல்.
5. கல்வி அமைச்சிடமிருந்து கிடைக்கின்ற நிதியேற்பாடுகளை முகாமை செய்தல்.
6. நிதி உதவிகள் மற்றும் நன்கொடைகளைப் பெற்றுக்கொள்ளல் பற்றிக் கவனம் செலுத்துதல்.
7. அரச சார்பற்ற அமைப்புக்களிடமிருந்து அனுசரணையைப் பெற்றுக்கொள்ளல்.

1. பணிப்பாளர் சபைக் கூட்டத்திற்கான அழைப்பு விடுத்தல்.
2. ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கான  அழைப்புவிடுத்தல்.
3. பிரதேச உப குழுக்களை நிறுவுதலும் அமுலாக்கலும்.
4. உள்ளூராட்சி நிறுவனத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடன் கலந்துரையாடுதல்.
5. ஊவா மாகாண வலயக் கல்வி அலுவலங்களின் நூலக இணைப்பாக்க பணிப்பாளர்களுடன் கலந்துரையாடுதல்.
6. பணியாளர் குழுhமிற்கான கூட்டங்களை நடத்துதல்.
7. ஊவா மாகாண நூலக சேவைகள் சபையின் மேற்பார்வை மற்றும் மதிப்பீட்டுப் பணிகள்.
8. ஊவா மாகாண நூலக சேவை பற்றிய மேற்பார்வை மற்றும் மதிப்பீட்டுப் பணிகள்.
9. ஊவா மாகாணத்திலுள்ள நூலகங்கள் பற்றிய மேற்பார்வைப் பணிகள்.
10. ஊவா மாகாண நூலகங்களின் மக்கள் தொடர்பாடல் பற்றிய பணிகள்.
11. தாபன, நிர்வாக மற்றும் முகாமைத்துவ உபாய முறைகளை அமுலாக்கல்.
12. நூலக ஆராய்ச்சி பணிகளை அமுலாக்கல்.

 
ஏப்ரயில் 2024
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4