Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் போக்குவரத்து, காணி, நீர் பாசனம், பொருளாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு
முகப்பு சேவைகள் பிரிவுகள் மற்றும் சேவைகள்

பிரிவுகள் மற்றும் சேவைகள்

ஊவா மாகாண நூலக சேவைகள் சபை கீழே குறிப்பிடப்பட்டட பிரிவுகளையும் சேவைகளையும் உள்ளடக்குகின்றது.

  • மாவட்ட மத்திய நூலகம்.
  • கணினி நூலகம்.
  • ஊவா மாகாண நூலகம்.
  • நடமாடும் நூலக சேவை.
  • கேட்போர்கூட வசதிகள் சந்தைப்படுத்தல் சேவை.
  • விரிவுரை மண்டப வசதிகள் சந்தைப்படுத்தல் சேவை.
1. நூலக சேவைகளை வழங்குகின்ற நேரங்கள் எந்த அளவிற்கு  மக்களின் தேவைகளுடன் அமைந்தொழுகுகின்றனவென்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு உபாய முறைகளை கடைப்பிடிக்க நாங்கள் அயராது உழைக்கின்றோம்.
2. நூலகத்தின் தொகுப்பு பற்றிய தகவல்களை  விரைவாகவும் சரியாகவும் பெற்றுக்கொள்ள கணனித் தரவுக் களஞ்சியமொன்று அமைக்கப்படவுள்ளது.
3. நூலகத்தின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள படிவங்களை பூர்த்தி செய்வேண்டியதில்லை. காசாக நூறு ரூபாவைச் செலுத்தி மாவட்ட மத்திய நூலகத்தினதும் கணனி நூலகத்தினதும் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
4. செய்தித்தாள் பிரிவின் சேவையும் வாசிகசாலையும் அனைவருக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
5. உங்களுக்கு அவசியமான நூல்களை உள்ளடக்கிய   தகவல் வளங்களை தேடிக்கொள்ளும் பொருட்டு நூலக பணியாளர் குழாம் ஒத்துழைப்பு நல்கும். நூல்களை உள்ளடக்கிய  தகவல் வளங்கள் பற்றிய  சிறந்த பயிற்;சி பணியாளர் குழாமுக்கு வழங்கப்பட்டுள்ளது.
6. பணியாளர் குழாம் உதவுகின்ற அதே வேளையில் சுமுகமாகவும் நடந்துகொள்வதோடு, தமது கடமையை நன்கு ஈடேற்ற அவசியமான அனுபவத்தை அவர்கள் கொண்டுள்ளனர்.
7. உங்களுக்கு அவசியமான நூல்களை வழங்க நாங்கள் முயற்சி செய்வோம்.
8. மக்களின் கலாசார மற்றும் கலைசார் பன்வகைமையை பிரதிபலிக்கக் கூடிய சேவைகளை வழங்க நாங்கள் முயற்சி செய்வோம்.
9. வலது குறைந்தோருக்கு பிரவேசிக்கக்கூடிய வகையில் அதற்கு ஏற்ற வகையிலான வசதிகளைக் கொண்ட சேவைகளை நாங்கள் திட்டமிடுகின்றோம்.
10. வாசகர்கள் அனைவரினதும் தேவைகளை அநீதியின்றி நிறைவேற்ற அவசியமான ஆலோசனைகளையும் பயிற்சியையும் பணியாளர் குழாமுக்கு வழங்கி வருகிறோம்.
11. தொலைத்தூரத்திலுள்ள கஷ்டமான முன்னேற்றமடையாத குக்கிராமங்களுக்கு நடமாடும் நூலக சேவைகளை வழங்குவதினூடாக நூலக சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
12. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் முதியோர் இல்லங்களில் வதிபவர்கள் போன்ற  சிறப்பான சமூகக் குழுக்களுக்கான நூலக சேவைகளை வழங்கி வருகிறோம்.
13. புதிய தகவல் தொழில்நுட்பத்தை வாசகர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வருகிறோம்.
14. பகுதிவாழ் மக்களின்  புலனுணர்வுடன் சம்பந்தப்;பட்ட தகவல் வளங்களின் படைப்பு, உருவாக்கம், விநியோகம், பிரபல்லியப்படுத்துதல் மற்றும் பேணிப்பாதுகாத்தல் ஆகியவற்றை எமது பொறுப்புக்களுடன் சேர்த்துக்கொண்டுள்ளோம்.
15. நூலகங்களுக்கிடையிலான வலையமைப்பு நூலகங்களுக்கடையிலான கடன் சேவைகளை அமுலாக்க உள்ளோம்.
16. வாகசர்களான உங்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ள எமது வெப் தளம் மூலமாக நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
17. பலவிதமான நுணுக்க முறைகளைப் பயன்படுத்தி உங்களுடன் ஒன்றுசேரும் பொருட்டு எமது வெப் தளத்தைப் பாவிக்க திட்டமிடுகின்றோம்.
18. உங்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் எமது சேவைகள் பற்றிய மேலதிக தகவல்களை வழங்க முடியும். நூலக மற்றும் தகவல் தொடர்பாடல் தொலில்நுட்ப சேவைகள் பற்றிய உங்களின் கருத்துக்களை நாங்கள் செவிமடுத்து வருகிறோம்.
19. எம்மோடு பகிர்ந்துகொள்ளக்கூடிய  அறிவு, திறன், மனப்பாங்கு உங்களிடமிருப்பின் பணிப்பாளரை / தலைவரைச் சந்திக்கவும். இன்றேல், பிரேரணைகள் மற்றும் முறைப்பர்டுகளுக்கான குறிப்புப் புத்தகத்தில் குறிப்பு பதிக.
20. மாதந்தோறும் வருடந்தோறும் எமது செயலாற்றுகையை மதிப்பீட்டுச் செயற்பாட்டுக்கு உள்ளாக்கி வருகின்றோம்.
 
 
 
மே 2024
S M T W T F S
28 29 30 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1